தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஹத் பாசிலைப் புகழ்ந்த விக்னேஷ் சிவன்

1 mins read
5a4cb39e-279f-4875-9c1d-90dc155eb08a
பஹத் பாசில், விக்னேஷ் சிவன். - படம்: ஊடகம்

‘ஆவேசம்’ படத்தில் நடித்திருந்த பஹத் பாசிலின் நடிப்பைப் பாராட்டி இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

‘ஆவேசம்’ படத்தைப் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் “இந்தப் படத்தை பார்த்து மிகவும் வியப்படைந்தேன். பஹத் பாசில் நீங்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ளீர்கள். அப்படி ஒரு நடிப்பைக் கொடுத்து இருக்கிறீர்கள். கதை சிறப்பாக எழுதப்பட்டு அற்புதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மலையாள சினிமா, அனைத்தையும் அடித்து நொறுக்கி வருகிறது. இப்படிப்பட்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவிற்கும் பஹத் பாசிலுக்கும் வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் 8 நாள்களில் சுமார் ரூ.60 கோடியை நெருங்குவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்