தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்

1 mins read
1f9b88ad-d303-4e83-9ffe-492e9bcb21db
கமல்ஹாசன். - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

பான் இந்தியா படம் வரத் தொடங்கியதில் இருந்தே தென் இந்திய நடிகர்களின் வளர்ச்சி அளவிடமுடியாமல் இருக்கிறது. தென் இந்திய நடிகர்கள் தற்பொழுது இந்தி திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் திரையின் முன்னணி பணக்காரர் என்ற வரிசையில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சூர்யா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி உலக நாயகன் முன்னுக்கு வந்திருக்கிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் இன்று தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்.

அறிக்கைகளின்படி, கமல்ஹாசனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.450 கோடி ஆகும். தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் இடம்பெற்றுள்ளார்.

அவர் முதல் இடத்தைப் பிடித்ததற்கு முக்கிய காரணம் ‘விக்ரம்’ படம். அவரது நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த ‘விக்ரம்’ சுமார் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது. இதுதான் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களை முறியடிக்க உதவியது என்றே சொல்லலாம்.

பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் நடித்துள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான ‘கல்கி 2898 AD’ல் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். ‘இந்தியன் 2’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ ஆகிய படங்கள் விரைவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி