குறும்படம் இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ்

குறும்படம் இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ்

1 mins read
cec37a90-e57b-4aa8-8e5b-68f28f815433
குறும்படம் இயக்கும் லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிறது எல்.சி.யூ குறும்படம்.

சினிமேட்டிக் யுனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் ‘தலைவர் 171’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் முதல் சுவரொட்டியும் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

லோகேஷ் கனகராஜ் சண்டைக் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹாலிவுட் பாணியில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யுனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.

இவர் இயக்கிய ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலெக்ஸ்’ போன்ற படங்கள் இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்