அனுபமாவின் ‘டில்லு ஸ்கொயர்’

அனுபமாவின் ‘டில்லு ஸ்கொயர்’

1 mins read
cabe1209-b67d-4593-840d-ed4939459692
‘டில்லு ஸ்கொயர்’ படத்தில் அனுபமா. - படம்: ஊடகம்

அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் ‘டில்லு ஸ்கொயர்’ படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

‘டில்லு ஸ்கொயர்’ திரைப்படம் மாலிக் ராம் இயக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகியது. அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் 125 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூன்றாம் பாகமும் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டில்லு ஸ்கொயர் படம் வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்