விஜய்க்காக 36 மணி நேரத்தில் பத்தாயிரம் வரிகளில் கவிதை

விஜய்க்காக 36 மணி நேரத்தில் பத்தாயிரம் வரிகளில் கவிதை

1 mins read
fa166872-813e-462d-a3a7-b5ae6bab759f
கவிதை எழுதிய கதிர். - படம்: ஊடகம்

விஜய்யின் தீவிர ரசிகர் கதிர், விஜய்க்காக 36 மணி நேரத்தில் பத்தாயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

விஜய்யின் ‘கில்லி ‘படம் நேற்று முன்தினம் உலகெங்கும் மறு வெளியீடு கண்டு நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் அதே நாளில் திருப்பத்தூரைச் சேந்த கதிர் என்ற இளைஞர் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை மொத்தமாக 36 மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி சாதனை படைத்த கதிருக்கு இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி