அஜித்துக்கு ஜோடியாக உள்ள ஸ்ரீ லீலா

அஜித்துக்கு ஜோடியாக உள்ள ஸ்ரீ லீலா

படம்: சமூக ஊடகம்

22 Apr 2024 - 4:45 pm

1 mins read

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.

படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீ லீலா ‘குட் பேட் அக்லி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

தற்போது அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் அஜித் ஒரு சண்டைக் காட்சிக்கு கார் ஓட்டும் காணொளி ஒன்று வெளியானது. அது ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்