ராயன் படத்தில் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடனம்

ராயன் படத்தில் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடனம்

1 mins read
2e73a951-be6c-4c85-acb3-0f56fcb0ac80
பிரபுதேவா - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது படம் ‘ராயன்’.

படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் மே மாத தொடக்கத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். இதில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பிரபுதேவாவுடன் பிரம்மாண்டமாக நடனமாடி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்