உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்

உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்

1 mins read
a6214a8a-3a6e-4c30-a8c3-92ffbd7813fa
கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. - படம்: ஊடகம்

கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு இரண்டு வருடங்களாக அவரது நடிப்பில் படங்கள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,’ ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.

`கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகுகிறது.

ஒரே மாதத்தில் இரண்டு கமல் படங்கள் வெளியாகவிருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்