சூர்யா- கார்த்திக் சுப்புராஜ் பட வேலைகள் விரைவில் தொடங்கும்

சூர்யா- கார்த்திக் சுப்புராஜ் பட வேலைகள் விரைவில் தொடங்கும்

1 mins read
9d300383-60e9-4736-8670-b21741d5d027
படத்திற்குத் தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இது சூர்யாவின் 44-வது படமாகும். அதானல் அப்படத்திற்குத் தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். 

இந்த படத்தில் நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் கிடைக்கும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதால் தற்போது சம்பளமே வாங்காமல் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 44 ஆவது படம் வரலாற்றை அடிப்பைடையாகக் கொண்ட குண்டர் கும்பல் பின்னணியைக் கொண்ட கதைக்களமாக உருவாகவுள்ளது. 

சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க்வுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17ஆம் தேதி துவங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 

சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா பாகம் 2’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதனால் சூர்யா ரசிகர்களிடையே இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்