பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனிகா

1 mins read
4248164f-f02b-4461-b12c-e03386b43bdb
என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.  - படம்: சமூக ஊடகம்

‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். 

படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார் அனிகா. 

அதன் பின்னர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ படத்திலும் அவருக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அனிகாவின் அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்னர் அனிகாவை குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

18 வயதான பிறகு புட்ட பொம்மா,  ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் அவர்.தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனிகா.

இந்நிலையில் தான் பள்ளி படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உள்ளதை உறுதி செய்யும் விதமாக பல்கலைக்கழகத்தில் தான் இருப்பது போல்  ஒரு படத்தை அனிகா சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

இருப்பினும் அவர் எங்கு படிக்கிறார், எந்தப் பாடம் படிக்கிறார் என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்