யாரையும் நெருங்கவிடமாட்டேன்: பரிணிதி

யாரையும் நெருங்கவிடமாட்டேன்: பரிணிதி

1 mins read
649d956b-bdf6-4c70-8595-c331aeab15f7
பரிணீதி சோப்ரா. - படம்: ஊடகம்

வாய்ப்புகளுக்காக கதாநாயகர்கள், இயக்குநர்களிடம் தாம் நெருங்கிப் பழகுவதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்கிறார் நடிகை பரிணிதி சோப்ரா.

அதேசமயம் திரை உலகில் சாதிக்க திறமை மட்டுமே போதாது என்றும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டது சர்ச்சையாகி உள்ளது.

“திரையுலகில் சாதிக்க ஒரு நடிகை வேறு சில செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டி இருக்கும். அப்போதுதான் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது சாத்தியமாகும். வாய்ப்புகளுக்காக நான் தயாரிப்பாளரிடம் நெருங்கிப் பழகுவதில்லை.

“எல்லோரிடமும் நான் திறமையை மட்டுமே நம்பி உள்ளேன் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவேன். யாரையும் நெருங்கவிட மாட்டேன்,” என்கிறார் பரிணிதி சோப்ரா.

இதன் காரணமாக தமக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைவதில்லை என்று கூறியுள்ள அவர், எக்காரணத்தைக் கொண்டும் இந்த நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பு இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்