பொய்த் தகவல்களைப் பரப்புவதாக ஜாக்குலின் வருத்தம்

பொய்த் தகவல்களைப் பரப்புவதாக ஜாக்குலின் வருத்தம்

1 mins read
d8044510-451a-470a-b0bb-cd4c4494fa23
ஜாக்குலின். - படம்: ஊடகம்

தன்னைப் பற்றி, வேண்டும் என்றே சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகப் புலம்புகிறார் நடிகை ஜாக்குலின்.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஜாக்குலினுக்கு தொலைக்காட்சித் தொடர்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் தன்னைப்பற்றி சிலர் தவறான தகவல்களைப் பதிவு செய்வது வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார் ஜாக்குலின். இதுபோன்ற அவதூறுகளை தாம் கண்டு கொள்வதில்லை என்றும் மோசமான சமூக ஊடகப் பதிவுகளை மையப்படுத்தி தம்மிடம் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்றும் அண்மைய பேட்டியில் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்