காவல்துறை அதிகாரியாக மிரட்டும் காஜல்

காவல்துறை அதிகாரியாக மிரட்டும் காஜல்

1 mins read
cb8e48db-882d-47b6-b843-01e53928661f
காஜல் அகர்வால். - படம்: ஊடகம்

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘சத்யபாமா’ திரைப்படம் மே 17ஆம் தேதி திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் நீடித்து வருகிறார் காஜல். அவர் நடித்த ‘ஹேய் சினாமிகா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாயகியை முன்னிலைப் படுத்தும் ‘சத்தியபாமா’ படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

“கதைப்படி நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன். அறிமுக இயக்குநர் சுமன் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரகாஷ்ராஜ், நவீன் சந்திரா ஆகிய இருவரும் முக்கியமான பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

“இது போன்ற படங்களும் கதைகளும் திரையுலகப் பயணத்தை தொடர தூண்டு கோலாக அமைகின்றன. மே 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் திரைகாண உள்ளது ‘சத்திய பாமா’ படம்,” என்கிறார் காஜல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்