ரூ.50 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

ரூ.50 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

1 mins read
b7343c7b-95cf-4855-b613-9aaf3fbb40db
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தியிடம் அவர் வழங்கியதாக நடிகர் சங்கம் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

கட்டடப் பணிகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவு பெறவில்லை. இதற்காக ரூ.50 கோடி தேவைப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்ததை அடுத்து கமல்ஹாசன், விஜய், உதயநிதி உள்ளிட்டோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர்.

தற்போது சிவகார்த்திகேயனும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டடப் பணிகள் நிறைவேறும் என சங்க நிர்வாகிகளில் ஒருவரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் வேகமாக நடப்பதாக வும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்