மரியாதைக் குறைவாகப் பேசினால் பதிலடி: திரிஷா

மரியாதைக் குறைவாகப் பேசினால் பதிலடி: திரிஷா

1 mins read
70ce740c-86cb-4aa9-8744-f05c15e62c0d
திரிஷா. - படம்: ஊடகம்

மறு வெளியீடு கண்டுள்ள ‘கில்லி’ திரைப்படத்துக்கு வசூல் ரீதியில் கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அப்படத்தின் கதாநாயகி திரிஷா தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னைப்பற்றிய எதிர்மறையான தகவல்களை வெளியிடுவோருக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

“என்னைப்பற்றி யாராவது மரியாதை குறைவாக பேசினால் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை காரணமாக இவ்வாறு நடந்து கொள்வதாக நினைக்கிறேன்.

“அவர்கள் எத்தகைய சூழ்நிலையில் வளர்ந்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கும்போது அதுவே அவர்களுக்கு போதுமான தண்டனை என்றும் நினைத்துக்கொள்வேன்.

“நாம் யார் என்பது நமக்குத் தெரிந்தால் அதுவே போதும்,” என்கிறார் திரிஷா.

குறிப்புச் சொற்கள்