அப்பா வேடங்களை இழக்க விரும்பாத சமுத்திரக்கனி

1 mins read
8dfcb834-303a-48cf-8c67-f6919d972b8b
சமுத்திரக்கனி. - படம்: ஊடகம்

குறைந்த செலவில் உருவாகும் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க கடுமையாகப் போராட வேண்டியுள்ளது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் நடித்து வரும் ‘ராமம் ராகவம்’ திரைப் படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதில் மீண்டும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். தந்தை என்று சொன்னாலே தமக்குள் வேதியல் மாற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்.

“ஒருமுறைகூட அப்பா வேடத்தை தவிர்க்க வேண்டும் என நான் நினைத்ததே இல்லை. இதுபோன்ற குறைந்த செலவில் உருவாகும் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போராட வேண்டியுள்ளது.

“நானும் கூட ‘அப்பா’ என்ற தலைப்பில் ஒரு படம் தயாரித்தேன். இதுவரை அது என்னவானது என்பதும், செலவு கணக்குகள் குறித்தும் எனக்கு ஒன்றுமே நினைவில் இல்லை,” என்கிறார் சமுத்திரக்கனி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்