முத்தம் தர விரும்பியதில்லை: மிருணாள் தாக்கூர்

முத்தம் தர விரும்பியதில்லை: மிருணாள் தாக்கூர்

1 mins read
5864fe8f-fb01-4042-b206-a20dab32ba1b
மிருணாள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தாம் அறவே விரும்பியது இல்லை என்கிறார் இளம் நாயகி மிருணாள் தாக்கூர்.

அவ்வாறான காட்சிகளில் நடிப்பதை தனது பெற்றோரும் ஏற்கவில்லை என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற காரணங்களால்தான் பல பட வாய்ப்புகளை நிராகரித்தேன். ஒரு நடிகையாக நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் கவர்ச்சி என்பது தேவைப்படும்.

“நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடிக்க மறுத்ததால் பல வாய்ப்புகளை இழந்தேன். ஒரு நடிகையால் எத்தனை நாள்களுக்குத்தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

அதனால் ஒரு கட்டத்தில் என் பெற்றோருடன் அமர்ந்து பேசி, முத்தக்காட்சிக்காக பட வாய்ப்பை இழக்க வேண்டியுள்ளது. உண்மையில் அத்தகைய காட்சிகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என்பதை புரிய வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார் மிருணாள் தாக்கூர்.

குறிப்புச் சொற்கள்
நடிகை

தொடர்புடைய செய்திகள்