புறக்கணிப்புதான் முன்னேற வழிகாட்டும்: பிரியங்கா சோப்ரா

இந்தித் திரையுலகை விட்டு தாம் ஒதுங்கி நிற்க அங்கு நிலவும் அரசியல்தான் காரணம் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

தற்போது ஹாலிவுட் படங்களிலும் அசத்தி வருவதால் இவரது ஊதியம் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்தி திரையுலகில் நிலவும் அரசியல் குறித்து அவர் ஒரு பேட்டியில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பல காரணங்களுக்காக இந்தித் திரையுலகம் என்னை நிராகரித்ததைப் புரிந்துகொண்டுள்ளேன். இத்தகைய நிராகரிப்பை உணர வேண்டுமெனில் முதலில் அதை நாம் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவு உண்டாகும்.

“நான் இதைத்தான் செய்தேன். அதனால்தான் இப்போது நான் இருக்கும் இடத்தை அடைவது சாத்தியமானது,” என்கிறார் பிரியங்கா சோப்ரா.

மொத்தத்தில் தாம் மன உறுதியுடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தித் திரையுலகில் அறிமுகமானவுடனேயே தமக்குப் பல நல்ல வாய்ப்புகள் தேடி வந்ததாகக் கூற முடியாது என்கிறார். உண்மையில் பாலிவுட்டில் தாம் ஒரு மூலையில் தள்ளப்பட்டதாகவும் கூறுகிறார்.

“ஒரு சிலருடன் எனக்கு கருத்து முரண்பாடு இருந்தது. அதனால் என்னை நாயகி யாக நடிக்க வைக்க அவர்கள் விரும்பவில்லை. எனவே எனக்கு முன்னுரிமை கிடைத்ததை அவர்களால் எந்த வகையிலும் ஏற்க முடியவில்லை.

“எனவேதான் இந்தி திரையுலகில் இருந்து சில காலம் விலகி நிற்க நேர்ந்தது,” என்கிறார் பிரியங்கா சோப்ரா.

பல்வேறு காரணங்களை முன்வைத்து தமக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற அரசியல் தமக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்.’

“திரையுலகில் அறிமுகமாகும் 17 வயது இளம் பெண்ணிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும். பல நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டபோது என் மனதில் இருந்த தன்னம்பிக்கை மொத்தமாக வழுக்கிச் செல்வதாக உணர்ந்தேன்.

“எனினும் எனது மன உறுதியால் அனைத்தையும் ஒருங்கிணைத்து இன்றுள்ள நிலையை எட்டிப்பிடித்துள்ளேன்,” என்று அண்மைய இன்ஸ்டகிராம் பதிவிலும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட், ஹாலிவுட் என இருபெரும் திரை உலகங்களில் தொடர்ந்து முன்னணி நாயகியாக வலம் வரும் பிரியங்கா, திருமணத்திற்குப் பின்னர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

பாலிவுட் திரையுலகில் அரசியல் நிலவுவதாகவும் தாமும் பல நாள்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரியங்கா சோப்ரா வெளிப்படையாகப் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அற்பத்தனமான காரணங்களுக்காக எனது பட வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. யாரோ ஒருவரின் காதலி நடிக்க வேண்டும் என்று சொல்லி என்னை ஒரு படத்தில் இருந்து நீக்கினர். அவர்கள் ஏன் முன்கூட்டியே இது குறித்து யோசிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி.

“இதுபோன்ற தருணங்களை எதிர்கொண்டு மனதை தேற்றிக்கொள்வது மிகவும் கடினமானது.

“நான் சார்ந்துள்ள திரையுலகத்தில் வேலையை வைத்துத்தான் அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் நீங்கள் நடித்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

“சில சமயங்களில் நாம் புறக்கணிக்கப்பட்டோம் என்பதை ஏற்கத்தான் வேண்டும். இது ஒரு வகையில் துக்கம் அனுசரிப்பது போன்ற நிலை.

“ஆனால் நான் தன்னம்பிக்கையுடன் இருப்பதாகச் சொல்லி மனதைத் தேற்றிக்கொள்வேன். இந்தப் புறக்கணிப்பு இருந்தால்தான் நாம் மேற்கொண்டு முன்னேறிச்செல்ல முடியும்,” என்று பிரியங்கா சோப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!