நயன்தாரா, “சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் சமூக இழிவுகளை சுட்டிக்காட்டும் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்,” என்று கூறியிருக்கிறார்.
அண்மையில் நயன்தாரா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியபொழுது, “சமூக இழிவுகளை மீறும் அதிகாரம் பெற்ற பெண்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது ஓர் ஆக்கப்பூர்வமான தேர்வு மட்டுமல்ல அவர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பாகவும் அவர்களுக்கான குரலாகவும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
இவர் அடுத்து மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோருடன் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ‘மன்னாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
படத்தில் மட்டும் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசாமல், நிஜ வாழ்க்கையிலும் அதுபோல் நடந்து வருகிறார்.
அண்மையில் அவரின் கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ என்ற ‘ஸ்கின்கேர் கிரீமை’யும் ‘ஃபெமி 9 சானிட்டரி நேப்கின்’ என்ற பிராண்டையும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.