விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களும் மறுவெளியீடு

1 mins read
71a5f528-62d5-4c21-bc72-929cae91ba7f
விஜய் சேதுபதியின் படங்கள். - படம்: ஊடகம்

‘கில்லி’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களும் மறு வெளியீடு காண இருக்கின்றன.

நடிகர் விஜய் நடித்த ‘கில்லி’ படம் மறுவெளியீடு செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததை அடுத்து, மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த ‘பில்லா’ மற்றும் ‘தீனா’ போன்ற படங்கள் மறுவெளியீடு காண்கின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான வெற்றிப் படங்களும் வெளியாக உள்ளன. அந்த வகையில், அவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, அதையடுத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற இரண்டு படங்களும் விரைவில் மறுவெளியீடு காண உள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்