நடிகர் ஜெய்யுடன் யோகி பாபு ‘பேபி அன்ட் பேபி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்.
‘குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
“நகைச்சுவையும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளும் சம அளவில் கலந்து ஓர் அசத்தலான குடும்பப் படமாக இப்படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் பிரதாப்.
நடிகை பிரக்யா நாக்ரா, ஜெய் ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். டி.பி.சாரதி ஒளிப்பதிவு செய்கிறார்.

