மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் சமந்தா.
அவர் அண்மையில் பல விஷயங்களை இணையத்தில் பகிர்ந்தார். அதில், “எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு ரசிகர்களைச் சேர்த்து வைத்து இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. என் பேச்சைக் கேட்கும் ரசிகர்கள் இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.
“ஆரோக்கிய விஷயங்கள் குறித்து நான் பேசுவது சிலருக்கேனும் தாக்கத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சியுறுவேன்.
“என் மனதுக்கு பிடித்ததைச் செய்வேன். எந்த முடிவை எடுத்தாலும் அது சரியானதுதானா இல்லையா என்று இரண்டு முறை சரிபார்த்துக்கொள்வேன்.
“மனரீதியாக அமைதியாக இல்லாவிட்டால் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க முடியாது. எனவே மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்,” என்று கூறியுள்ளார் சமந்தா.
இந்நிலையில் சமந்தா தன்னுடைய தயாரிப்பில் ‘மா இன்டி பங்காராம்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவர் கையில் துப்பாக்கியுடன் காணப்படும் சுவரொட்டி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளராகவும் கலை உலகில் களமிறங்கியுள்ளார்.