போர் விமானி அபிநந்தன் கதையில் அபிநந்தனாக பிரசன்னா நடித்துள்ளார்.
போர் விமானி அபிநந்தனை 2019ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் சிறைப் பிடித்தது. பின்னர் பல்வேறு உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து, ‘ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்’ என்ற பெயரில் இணையத் தொடர் உருவாகியுள்ளது. சந்தோஷ் சிங் இயக்கியுள்ள இதில் பிரசன்னா, ஜிம்மி ஷெர்கில், அஷுதோஷ் ராணா, ஆசிஷ் வித்யார்த்தி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜியோ சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதில் போர் விமானி அபிநந்தனாக, பிரசன்னா நடித்துள்ளார்.
அந்தத் தொடர் பற்றி பிரசன்னா பேசுகையில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான இணையத் தொடரில் நடித்ததில் மகிழ்ச்சி. அதோடு அபிநந்தனாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். வெளியில் தெரிந்த செய்திகளை விடவும் தெரியாத உண்மைச் சம்பவங்களும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன,” என்றார் அவர்.

