விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’க்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியைத் தொடங்க இருக்கிறார்கள்.
‘குக் வித் கோமாளி’ சென்ற சனிக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. முன்பு அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் அவருக்குப் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜனுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
வெங்கடேஷ் பட் அங்கிருந்து விலகியதுடன் சன் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சிக்கு போட்டியாக ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியைத் தொடர இருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பு அண்மையில் சன் தொலைக்காட்சியில் வெளியானது.
இதில் எந்த நிகழ்ச்சி வெற்றி பெறும் என்று பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

