தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

1 mins read
9315860e-eeb7-4649-852e-303f7ea0b110
விஜய் தேவரகொண்டா. - படம்: ஊடகம்

பாடல் இல்லாத படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

தமிழ்த் திரையில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கு, இந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவரது 12வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் அனிருத். கவுதம் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

மேலும், இந்த படம் ‘கைதி’ படத்தைப்போன்று விறுவிறுப்பான கதையில் உருவாவதால், கதையின் வேகத்தை பாடல்கள் குறைத்து விடும் என்பதற்காக பாடல்களே வைக்கவில்லையாம். அதனால் படத்துக்கு படம் துள்ளலான பாடல்களை கொடுத்து வரும் அனிருத், இந்தப் படத்திற்கு பின்னணி இசை மட்டுமே அமைக்க இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி