சூதாட்ட வழக்கு; தமன்னாவுக்கு சிக்கல்

சூதாட்ட வழக்கு; தமன்னாவுக்கு சிக்கல்

படம்: ஊடகம்

30 Apr 2024 - 8:37 pm

1 mins read

சூதாட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாகாததால் சிக்கலை எதிர்கொண்டுள்ளார் நடிகை தமன்னா.

சூதாட்டம் தொடர்பான விளம்பரப் படம் ஒன்றில் அண்மையில் நடித்திருந்தார் தமன்னா. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக திங்கட்கிழமை நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக வேண்டியிருந்தது.

ஆனால் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.

சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக இந்தித் திரையுலகைச் சேர்ந்த முன்னணி கலைஞர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமல் தவிர்த்துள்ளார் தமன்னா. விசாரணை நடைபெறும் தேதியில் தாம் மும்பை நகரில் இல்லை என்று அவர் காரணம் தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பர நிகழ்விலும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான காணொளி, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்
நடிகை