தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஜோதிகா

1 mins read
762d4f7e-311b-47c3-af55-dd0b4598306a
ஜோதிகா. - படம்: ஊடகம்

அண்மைக் காலமாக கணவர் சூர்யாவின் ஒத்துழைப்புடன் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஜோதிகா.

தற்போது இமயமலை பகுதியில் சுற்றுலா மேற்கொண்டுள்ள அவர், எவரெஸ்ட் சிகரத்துக்குச் சென்றாராம்.

மலைப்பகுதிகளில் ஏறியது, பனியில் நனைந்தது, மலை உச்சியில் உள்ள சிறிய உணவகத்தில் சாப்பிட்டது, வசதி குறைவான, மின்சாரம் இல்லாத சிறிய வீட்டில் தங்கியிருந்தது எனப் பல்வேறு அனுபவங்களை சமூக ஊடகங்களில் அவர் காணொளி வடிவில் பதிவிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்வதும் எவரெஸ்ட் உச்சியில் இருந்தபடி ஜோதிகா உற்சாகமாக கையசைப்பதும்கூட காணொளிகளில் பதிவாகி உள்ளன.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்