காதலா, காளை மாடா என்ற கேள்விக்கு விடை தேடும் நாயகனின் கதை ‘நின்னு விளையாடு’

காதலா, காளை மாடா என்ற கேள்விக்கு விடை தேடும் நாயகனின் கதை ‘நின்னு விளையாடு’

1 mins read
0ef85059-9270-4f46-90b8-46e4fcb4b54c
‘நின்னு விளையாடு’ படத்தில் தினேஷ், நந்தனா. - படம்: ஊடகம்

நடன பயிற்சியாளர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘நின்னு விளையாடு’.

இதில் மலையாள நடிகை நந்தனா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த அனுபவம் உள்ள இவர், தமிழில் அறிமுகமாகும் படம் இது.

முன்னணி நாயகர்கள் பலரது படங்களுக்கு நடனம் அமைத்தவர் தினேஷ் மாஸ்டர்.

‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமான இவர், அதன் பிறகு ‘நாயே பேயே’, ‘சம்பவம்’, ‘லோக்கல் சரக்கு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது ‘நின்னு விளையாடு’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ராஜ் பீக்காக் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சாமானியன் ஒருவரது வாழ்க்கையில் காதல் குறுக்கிடும்போது என்னவாகிறது என்பதே இப்படத்தின் மையக்கருவாம்.

“இதை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் படமாக்கி உள்ளோம். இப்படத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

“கதைப்படி, கதாநாயகன் காளை மாடு வளர்க்கிறார். அதன் மீது மிகுந்த பாசம் காட்டி வரும் நிலையில், நாயகியைச் சந்திக்கிறார். இருவருக்கும் இடையிலான நட்பு பின்னர் காதலாக மாறுகிறது. எனினும், ஒரு கட்டத்தில் காதலா, காளைமாடா என்ற சூழல் உருவாகிறது. நாயகன் என்ன முடிவு எடுத்தார் என்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்

“சமயங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு போட்டியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படம், அடுத்த மாதம் திரைகாணும்,” என்கிறார் தினேஷ் மாஸ்டர்.

குறிப்புச் சொற்கள்