‘நல்ல படைப்பு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்’

சிறைவாசம் என்பது மனிதர்களைச் சிதைத்து மனத்தை உடைக்கிறது என்கிறார் இயக்குநர் சத்ய சிவா. இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘ஃப்ரீடம்’.

சில உண்மைச் சம்பவங்கள், அவை தொடர்பாக ஊடகத்தில் வெளிவந்த கட்டுரைகள், கருத்துகள், செய்தித் தொகுப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து தனது படத்துக்கான கருவையும் கதைக்களத்தையும் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் சத்ய சிவா.

இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும் மலையாள நடிகை பிஜுமோல் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

“கடந்த 1990களின் காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவம் சார்ந்த கதையை இப்படத்தின் மூலம் சொல்லப் போகிறேன்.

“கடந்த 1990களில் இலங்கையில் இருந்து போர் வெப்பம் தாங்க முடியாமல் நிறைய பேர் தமிழகத்துக்கு வந்தனர். அவர்கள் இங்கே இருந்த சிறப்பு முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.

“அவர்களுக்கு மருத்துவ உதவிகள், வாழ்க்கை நடத்துவதற்கான அடிப்படை உதவிகள் செய்யப்பட்டன. ஒரு பெரிய அரசியல் தலைவரின் மரணத்திற்குப் பிறகு எல்லாமே மாறியது.

“அந்த முகாம்களில் இருந்த பிரச்சினைகள், அவர்கள் வாழ்க்கை அங்கே எப்படிப்பட்டதாக இருந்தது, சுதந்திரத்தை அடைய அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதுதான் கதை.

“அவர்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடியதும் இதில் முக்கியமாக இடம்பெறுகிறது,” என்கிறார் சத்ய சிவா.

தற்போதுள்ள தலைமுறைக்கு அழுத்தம் திருத்தமாக ஒரு கதையைச் சொல்ல விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு படைப்பும் முதற்கட்டமாக அதன் படைப்பாளிக்கு மனநிறைவு தர வேண்டும் என்கிறார்.

“அந்த அடிப்படையில் பார்த்தால், நான் கையாளும் இக்கதை முழு மனநிறைவைத் தந்துள்ளது என்பேன்.

“நான்கு பக்கங்களைப் படித்தால் வராத உணர்வு, நான்கு பேர் சொன்னால் மனதில் பதியும். அந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்த ‘ஃப்ரீடம்’ (FREEDOM) முக்கியமான படம் என்பேன்.

“எழுதுவதோ, படிப்பதோ, படம் எடுப்பதோ, நமக்குள் ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். அப்படிப்பட்ட படைப்பாகத்தான் ‘ஃப்ரீடம்’ படம் உருவாக்கப்படுகிறது.

“அனைத்தையும்விட முக்கியமான அம்சம் என்னவென்றால், என்னைப் பாதிக்காத எதையும் நான் சினிமாவாக எடுக்கத் துணிய மாட்டேன்,” என்று வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் பேசுகிறார் இயக்குநர் சத்ய சிவா.

இப்படத்தின் கதாநாயகன் சசிகுமாரை வைத்து ஏற்கெனவே ‘நான் மிருகமாய் மாற’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சத்ய சிவா. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாலும், வசூலில் சாதிக்காதது வருத்தம்தான் என்கிறார்.

“முதல் படம் வெற்றிபெறவில்லை என்றாலும், என் திறமை மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்துள்ளார் சசிகுமார். இதனால் என் மனதிலும் நம்பிக்கை அதிகரித்தது.

“பின்னர் திடீரென ஒருநாள் நேரில் அழைத்து, என் படத்துக்கான தேதிகளை ஒதுக்கினார்.

“மனதோடு இணைந்து வேலைகளைச் செய்து கொடுத்த அவர் படம் வெற்றிபெற வேண்டும் என்பதில் என்னைவிட அதிக அக்கறையுடனும் கவலையுடனும் உள்ளார்.

“முழுப் படத்தையும் பார்த்துவிட்டு, ‘நன்றாக வந்துள்ளது’ என்று அவர் பாராட்டியதைவிட பெரிய பாராட்டு இருக்காது,” என்கிறார் இயக்குநர் சத்ய சிவா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!