தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூறு கிலோ எடை தூக்கிய நாயகி

1 mins read
854b0373-cc1e-4cf2-86bf-c13bf623f223
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

தென்னிந்திய நடிகைகள் பலரும் தற்போது தீவிர உடற்பயிற்சியில் நாட்டம் கொண்டுள்ளனர். அந்தப் பட்டியலில் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார்.

அவரும் தனுஷும் இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்படுகிறதாம். இந்நிலையில் இரவு எந்த நேரத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் உடற்பயிற்சிக்கு என கணிசமான நேரத்தை ஒதுக்கி விடுகிறார் ராஷ்மிகா.

அண்மையில் மும்பை உடற்பயிற்சிக் கூடத்தில் 100 கிலோ எடையை தூக்கி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ராஷ்மிகா 80 கிலோ மட்டும் தூக்கியுள்ளதாக ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஒரு இளம் நடிகை 80 கிலோ தூக்கினாலும் அது பெரிய சாதனைதான் என ராஷ்மிகா ரசிகர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்