தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இப்போது நான் ஒளியை உணர்கிறேன்: ஷ்ருதி

1 mins read
93d89676-8a10-4f6a-84d4-6086d07eee49
ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்

தனது காதலரைப் பிரிந்த பிறகு சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில தகவல்களைப் பகிர்ந்து வருகிறார் ஷ்ருதி ஹாசன்.

இவர் தனது தங்கை அக்‌ஷரா ஹாசனுடன் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சகோதரிகள் இருவரும் இணைந்து இருக்கும் சில புகைப்படங்கள் ஷ்ருதியின் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியாகி உள்ளன.

“இப்போது நான் ஒளியை உணர்கிறேன். இத்தகைய தருணங்கள் மூலம் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக, நன்றி உள்ளவளாக உணர்கிறேன்,” என்று ஷ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக தன் காதலரைப் பிரிந்துள்ள சூழலில், காதலருடன் வசித்த நாள்களை இருண்ட காலம் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்