தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யுடன் நடனமாட மறுத்த ஸ்ரீலீலா அஜித்துடன் கைகோத்தார்

1 mins read
4005b97e-6249-4cfc-ab46-f523a23c0d85
ஸ்ரீலீலா. - படம்: ஊடகம்

நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரீலீலா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அஜித்தின் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தனது நடனம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவரும் ஸ்ரீலீலா, தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தச்சூழலில்தான் விஜய்யின் ‘கோட்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்கு கிடைத்த வாய்ப்பை அவர் வேண்டாம் என நிராகரித்துள்ளார். “தமிழில் எனது அறிமுகம் ஒரு பாடலில் இருக்க வேண்டாம். தெலுங்கு சினிமாபோல் தமிழிலும் நாயகியாக நடிக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.

“தமிழில் நடித்து முன்னணி இடத்துக்கு வந்துவிட்டால், அதன்பிறகு பெரிய படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுவேன். ஆனால், இப்போதைக்கு அதுபோல் நடனமாட விருப்பமில்லை. அதனால்தான் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

“அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டியதால் அதை ஏற்றுக்கொண்டேன்,” எனக் கூறியுள்ளார் ஸ்ரீலீலா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்