‘சித்த வைத்திய அறிவைக்கொண்டு சிக்கலைத் தீர்க்கும் நாயகன்’

‘சித்த வைத்திய அறிவைக்கொண்டு சிக்கலைத் தீர்க்கும் நாயகன்’

1 mins read
0b200610-eb8e-4582-82cf-1d3250637cd1
‘ரசவாதி’ படத்தில் அர்ஜுன்தாஸ், தன்யா ரவிச்சந்திரன். - படம்: ஊடகம்

இயக்குநர் சாந்தகுமார் அடுத்து ‘ரசவாதி’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் அர்ஜுன்தாஸ், தன்யா ரவிசந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் வரும் 18ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

இயக்குநர் சாந்தகுமார் இதற்கு முன்பு ‘மகாமுனி’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘ரசவாதி’ திரைப்படம் தமது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறார்.

“கொடைக்கானலில் வாழும் இளம் சித்த வைத்தியர் திடீரென ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறார். அதிலிருந்து விடுபட அதிரடி உள்ளிட்ட வழிகளை நாடாமல் தமக்குள்ள சித்த வைத்திய அறிவைக்கொண்டு வெளிவரத் திட்டமிடுகிறார்.

“தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் ஓர் இளம் பெண் திடீரென அந்தப் பணியில் இருந்து விலகுகிறார். அதன் பின்னர் அவர் கதாநாயகனைச் சந்திக்கிறார். அதன் பிறகே பிரச்சினைகள் வெடிக்கத் தொடங்கும். ‘ரசவாதம்’ என்பது உலோகம் ஒன்றை இன்னொரு உலோகமாக மாற்றுவது.

“படத்தில் நாயகன் நிகழ்காலத்தை இன்னொரு காலமாக மாற்றுகிறார் என்பதே கதை,” என்கிறார் சாந்தகுமார். அர்ஜூன்தாஸ்தான் இப்பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்ததாகவும் சொல்கிறார். 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்