தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நெல்சன்

1 mins read
d9c46d74-33db-488d-8331-8dfc95dbce2b
நெல்சன் திலிப்குமார். - படம்: ஊடகம்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்நிறுவனத்துக்கு ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“நான் எனது 20 வயதில் ஊடகப் பயணத்தைத் தொடங்கினேன். அதன் பின்னர் பல்வேறு வெற்றி, தோல்விகளைக் கடந்து இன்றுள்ள இடத்தை அடைந்திருக்கிறேன்.

“நாம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்கிறார் நெல்சன்.

தனது நிறுவனத்தின் மூலம் ரசிகர்களுக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமது லட்சியம் என்று குறிப்பிடுபவர், தனது எண்ணம் ஈடேறும் என சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்