கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. இப்படத்தில் கீர்த்தியுடன் படம் முழுவதும் பயணம் செய்யும் கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார்.
சி.எஸ்.அமுதன், வெங்கட் பிரபு ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள சந்துரு இயக்கும் படம் இது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து தனது மகிழ்ச்சியை சமூக ஊடகப்பக்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார் கீர்த்தி.
“படக்குழுவினருக்கு நன்றி. இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு பல்வேறு வியப்பான அம்சங்கள் திரையில் காத்திருக்கின்றன.
“அனைவரும் மனம்விட்டுச் சிரிக்க முடியும். அந்த வகையில் நல்ல படைப்பாக உருவாகி உள்ளது. ரசிகர்களை சிரிக்க வைக்க காத்திருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி.