வெற்றிமாறன்: போதைப்பொருள் பழக்கம் வேண்டாம்

வெற்றிமாறன்: போதைப்பொருள் பழக்கம் வேண்டாம்

1 mins read
e0d68ff0-bf4c-447a-9474-b4ed3f31d3c2
வெற்றிமாறன். - படம்: ஊடகம்

“நம்முடைய வாழ்க்கை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்,” என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், போதைப்பொருள் உள்பட எந்தவிதமான அடிமையாக்குதலும் நல்லதல்ல என்றார்.

“எனக்கு முன்பு புகைபழக்கம் இருந்தது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அறிந்ததும் அப்பழக்கத்தைக் கைவிட்டேன்.

“இளையர்கள் யாரேனும் அப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அதைக் கடந்து வருவதற்கான முயற்சிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

“பெற்றோர், பிள்ளைகளுடனான உரையாடலைத் தொடங்க வேண்டும், இதன் மூலம் பிள்ளைகள் தவறான வழியில் செல்வதைத் தடுக்க இயலும்,” என்று இயக்குநர் வெற்றிமாறன் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்