தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்ரம் பட சுவரொட்டியால் சர்ச்சை

1 mins read
95075b1b-feb3-4902-9ac9-3669aecf26c9
விக்ரம். - படம்: ஊடகம்

விக்ரம் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் சுவரொட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரமின் பிறந்தநாளையொட்டி இரண்டு சுவரொட்டிகளைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவற்றுள் ஒரு சுவரொட்டியில் கதாநாயகன் விக்ரம் இரண்டு கைகளிலும் இரண்டு அரிவாள்களை கையில் ஏந்தியபடி ஆவேசத்துடன் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இச்சுவரொட்டி வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற சுவரொட்டிகள் இளையர்களின் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்