நூறு நாள்களைக் கடந்த ‘வேட்டையன்’ படப்பிடிப்பு

1 mins read
e1c39acc-a922-4e5e-9431-74fdca91d2b0
ரஜினி. - படம்: ஊடகம்

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்தால் அது செய்தியாகும். ஆனால், ரஜினி நடிப்பில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு 100 நாள்களைக் கடந்துள்ளதாம். இதையும் கொண்டாடுகிறார்கள்.

இப்படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு 100வது நாளை எட்டியதை அடுத்து, சமூக ஊடகத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார் ஞானவேல்.

தற்போது சென்னையில் மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு ரஜினியின் அறிமுகப் பாடலுக்கான காட்சி எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்