தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

60 வயதுக்குப் பிறகும் நாயகனாக திரையுலகை ஆளும் நடிகர்கள்

1 mins read
95070d6f-ce21-41fe-8741-6fdd36eab26e
மம்முட்டி-ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’. - படம்: ஊடகம்

நடித்தால் நாயகனாகத்தான் நடிப்பேன் என 60 வயதைக் கடந்தும் ‘பாக்ஸ் ஆஃபிஸ்’ வசூல் சக்ரவர்த்திகளாக வலம் வருகிறார்கள் சில நாயகன்கள்.

இவர்களில் 73 வயதைக் கடந்தும் தமன்னா, மாளவிகா மோகனன் என இந்தத் தலைமுறை நாயகிகளுடனும் ஜோடி சேர்ந்து நடனமாடி வருகிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.

ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்த திரைப்பயணத்தை 69 வயதாகியும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

சினிமாவில் புது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் தாகம் இன்னும் அவரிடம் தணியாமல் இருப்பது ரசிகர்களை உற்சாகத்துடன் வைத்துள்ளது.

72வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘காதல் தி கோர்’ என சமீபகாலங்களாக கதையின் நாயகனாக வலம் வருகிறார்.

‘த்ரிஷ்யம்’, ‘லூசிபர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மலையாளத் திரையுலகை ஆட்சி செய்துவருகிறார் மோகன்லால். 63 வயதைக் கடந்த மோகன்லாலுக்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

மகன் ராம்சரணுக்கு போட்டியாக 68 வயதைக் கடந்தும் தெலுங்கில் நாயகனாகக் கலக்கிவருகிறார் சிரஞ்சீவி.

ஆகாயத்தில் பல்டி, ஒரே நேரத்தில் 500 பேர் எதிரே வந்தாலும் அசால்ட்டாக அடிப்பது என 64 வயதைக் கடந்தும் தெலுங்கில் தனது வீரத்தைக் காட்டி வருகிறார் நந்தமூரி பாலகிருஷ்ணா.

குறிப்புச் சொற்கள்