இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ள நிதி அகர்வால்

1 mins read
6895e75d-5ddd-40af-9e18-d0997f766352
நிதி அகர்வால். - படம்: ஊடகம்

தெலுங்கில் தமது இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ளார் நிதி அகர்வால்.

‘சலார்’ படத்துக்குப் பிறகு ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடிக்கும் பிரபாசுக்கு அதில் நிதி அகர்வால்தான் ஜோடியாம்.

படத்தில் மேலும் இரண்டு நாயகிகள் உள்ளனர். அண்மையில் மூன்று நாயகிகளும் பிரபாசுடன் இணைந்து நடனமாடும் ஒரு பாடல் காட்சியை எடுத்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் நிதியின் நடனத்திறமையை பிரபாஸ் தனிப்பட்ட முறையில் பாராட்டினாராம்.

எனவே தெலுங்கில் தனது இரண்டாவது சுற்றில் ரசிகர்களை மேலும் மகிழ்விக்க முடியும் என நம்புவதாகச் சொல்கிறார் நிதி அகர்வால்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்