அரசியலுக்கு வர பார்த்திபனின் நிபந்தனை

அரசியலுக்கு வர பார்த்திபனின் நிபந்தனை

1 mins read
555a2862-14c1-4602-8cbb-d6799c7b9120
பார்த்திபன். - படம்: ஊடகம்

தான் ஒரு படத்துக்கு ரூ.250 கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் அளவுக்கு உயரம் தொட்டுவிட்டால் நேரடி அரசியலில் ஈடுபடத் தயார் என்கிறார் பார்த்திபன்.

அண்மையில் நிகழ்ந்த கல்லூரி மாணவர்களுடனான உரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நடிகர் விஜய் ரூ.200 கோடி ரூபாய் ஊதியm பெறுகிறார். ஆனால் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து சேவை செய்ய விரும்புகிறார். எனக்கு அரசியல் ஆசை உண்டா என்று பலரும் கேட்கிறார்கள்.

“விஜய் போன்று ரூ.250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சமயத்தில் நானும் சினிமாவைக் கைவிட்டு அரசியலில் குதிப்பேன்,” என்று பதில் அளித்துள்ளார் பார்த்திபன்.

குறிப்புச் சொற்கள்