குப்பை மேட்டில் முகம் சுளிக்காமல் நடித்த தனுஷ்

குப்பை மேட்டில் முகம் சுளிக்காமல் நடித்த தனுஷ்

1 mins read
e0ba5146-02bc-4281-a01b-29306715fdc5
தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது ‘குபேரா’. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. அங்குள்ள குப்பைமேட்டில் தனுஷ் முக்கியமான ஒரு பொருளைத் தேடி அலையும் காட்சியை அண்மையில் எடுத்தனர்.

இதற்கான படப்பிடிப்பின்போது எந்தவித முகக்கவசமும் அணியாமல் பத்து மணி நேரம் நடித்துள்ளார் தனுஷ். அவரது அர்ப்பணிப்பை படக்குழுவினர் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்