மறு வெளியீடு காணும் ‘வில்லு’

1 mins read
e53d2e8b-23a7-482f-8583-f73dd9c356da
‘வில்லு’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி. - படம்: ஊடகம்

மறு திரையீடல் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்கள் மூலம் தமிழ்த் தயாரிப்பாளர்கள் காசு பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

அண்மையில் சில படங்கள் இவ்வாறு வெளியீடு கண்டபோதிலும், ‘கில்லி’ படத்துக்கு கிடைத்த வசூல், திரையுலகத்தினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. இந்நிலையில் மறுவெளியீடு மூலம் இப்படத்தின் வசூல் ரூ.20 கோடியை பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விஜய் நடித்த ‘வில்லு’ படத்தையும் மறுவெளியீடு செய்ய உள்ளனர். பிரபுதேவா இயக்கிய படம் இது.

நயன்தாரா நாயகியாகவும் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 21ஆம் தேதி ‘வில்லு’ படத்தை மறுவெளியீடு செய்ய உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்