‘வேட்டையன்’ ரஜினியின் வழக்கமான படமல்ல: ராணா

‘வேட்டையன்’ ரஜினியின் வழக்கமான படமல்ல: ராணா

1 mins read
7f0f2863-0d46-4f9e-bce2-c8a0c6adf19a
ராணா டகுபதி. - படம்: ஊடகம்

‘வேட்டையன்’ வழக்கமான ரஜினி படமாக இருக்காது என்றும் ரஜினியின் திரைப்பயணத்தில் மாறுபட்ட படைப்பாக இப்படம் அமையும் என்றும் கூறியுள்ளார் ‘பாகுபலி’ படப்புகழ் ராணா டகுபதி.

ரஜினியுடன் நடிக்க தாம் விரும்பியதாகவும் அந்த ஆசை மிக எளிதில் நிறைவேறும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வேட்டையன்’ படத்தில் நீதித்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கும். மேலும், தொழில்துறை சார்ந்த அம்சங்கள் குறித்தும் இந்தப் படம் பேச இருக்கிறது. இது போன்ற மாறுபட்ட கதைகளில் ரஜினி நடிப்பது மகிழச்சி தருகிறது,” என்கிறார் ராணா டகுபதி.

‘வேட்டையன்’ படத்தை ஞானவேல் இயக்க அமிதாப்பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்