நயன்தாரா நடிக்கும் புதுப்படத்திற்கு ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழில் ‘தி டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாள கதாநாயகன் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தில் இணைந்துள்ளார். இரட்டை இயக்குநர்களான ஜார்ஜ் பிலிப்ஸ், சஞ்சய் குமார் ஆகியோர் இப்படத்தை இயக்குகின்றனர்.
இதில் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியானது.
இந்நிலையில் பூசையோடு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா.
ஆசிரியையாக நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அந்தத் தருணத்திலேயே மனதில் ஒருவித மனநிறைவு ஏற்பட்டது என்றும் நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் நயன்தாரா.