தமிழைவிட தெலுங்குப் படங்களில் நடிப்பது பல்வேறு சிரமங்களைத் தரும் என்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.
தனுஷுடன் நடித்த ‘வாத்தி’ படத்தை அடுத்து இவர் மலையாளத்தில் ’சுயம்பு’ என்ற படத்தல் நடித்து வருகிறார். அண்மையில் ‘ஆதி சக்தி’ என்ற அமைப்பைத் தொடங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பிற மொழிகளைவிட மலையாளத்தில் நடிப்பது எளிதாக உள்ளதாக சம்யுக்தா கூறியுள்ளார்.
“மலையாளத்தில் ஒப்பனைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதனால் கணிசமான நேரம் மிச்சமாகும். தெலுங்கில் அதிகமாக அலங்காரம் செய்துகொண்டு திரையில் தோன்றுவதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
“படப்பிடிப்பின்போது ஒப்பனை நிபுணர்கள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள். வசனங்களை மனப்பாடம் செய்யும்போதுகூட ஒப்பனை நீடிக்கும்.
“அழகாக இல்லை என்றால் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள சேலை அலங்கார நிபுணரும் இடையூறு செய்வார். மலையாளத்தில் ஒப்பனை இன்றி கூந்தலை பின்னாமலும் நடிக்க முடியும்,” என்கிறார் சம்யுக்தா.

