ஒரே வாரத்தில் ரூ.50 கோடி வசூல் கண்டுள்ள ‘அரண்மனை 4’

ஒரே வாரத்தில் ரூ.50 கோடி வசூல் கண்டுள்ள ‘அரண்மனை 4’

1 mins read
57d0fbc0-7414-4298-893a-2c0355c9d902
‘அரண்மனை-4’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘அரண்மனை 4’ படத்தின் வசூல் தமிழ் திரையுலகத்தினரை மகிழவும் வியக்கவும் வைத்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் வசூல் பட்டியலில் ‘அரண்மை– 4’ முதல் இடம் பிடித்துள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி வெளியீடு கண்ட இப்படம் இதுவரை ரூ.50 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது. இதில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடப்பாண்டில் முதல் நான்கு மாதங்களில் தமிழில் 80க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

அவற்றில் ஒரு படம்கூட தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாக அமையவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்