இயக்குநர் அமீர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நடித்துள்ளார் அமீர்.
அண்மையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, போதைப்பொருள் விவகாரத்தில் அமீரின் நண்பர் ஜாஃபர் சாதிக் கோடிக்கணக்கில் செலவிட்டு படம் தயாரிப்பது எவ்வாறு சாத்தியமானது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த அமீர், “இதே கேள்வியை லைக்கா நிறுவனரிடம் எழுப்புவீர்களா. அந்நிறுவனத்தின் பின்னணி குறித்து விஜய்யும் ரஜினியும் யோசித்தார்களா?” என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் தனது படத்தின் விளம்பரத்துக்காக விஜய், ரஜினியை தேவையின்றி அமீர் சீண்டுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

