தாம் திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும் இதுவரை 34 படங்களில் நடித்து முடித்திருப்பதாகவும் சொல்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
இருப்பினும் இதுவரை எந்த ஒரு படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பே முத்தக்காட்சிகளில் நடிக்க இயலாது என்பதை ஒரு நிபந்தனையாகவே தெரிவித்து விடுவேன்.
“அதற்கு ஒப்புக்கொண்டு என்னைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, அல்லது வேறு நடிகையை ஒப்பந்தம் செய்தாலும் சரி அதற்கு நான் தயாராக இருப்பேன்,” என்கிறார் சோனாக்ஷி.
இவர் தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ளார்.


