உலகில் புடவையைவிட சிறந்த ஆடையில்லை: ஆலியா பட்

உலகில் புடவையைவிட சிறந்த ஆடையில்லை: ஆலியா பட்

1 mins read
6c815dec-a117-46f7-a7c4-71eadf40f261
இந்தியாவின் சார்பில் பல பிரபலங்கள் ஆடை அலங்கார நிகழ்வில் கலந்துகொண்டாலும், நடிகை ஆலியா பட்டின் அழகான பேஸ்டல் நிற பூங்கொத்து எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. - படம்: ஊடகம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் ‘மெட் காலா’ ஆடை அலங்கார நிகழ்வில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரைக் கலைஞர்களும் பங்கேற்றனர்.

இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்கவர் புடவையை அணிந்து கலந்துகொண்டார்.

இதுகுறித்து, ‛‛இந்தச் சிறப்பான சேலைக்குப் பின்னால் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த உலகில் புடவையைத் தவிர வேறு சிறந்த ஆடை எதுவும் இல்லை. 163 கைவினைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஏறக்குறைய 1905 மணி நேரம் செலவு செய்து 79 நாட்களில் இந்தப் புடவையை வடிவமைத்துள்ளனர்,” என்று ஆலியா பட் பெருமிதத்துடன் கூறினார்.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வேலைப்பாடுகள் நிரம்பிய இந்தப் புடவையை வடிவமைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்